''என் மகன் காலேஜுல படிக்குறான், போடா போய் போராடுன்னு அனுப்பிட்டேன்...''
மதுரை: மதுரையில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது ஒரு ஆட்டோ டிரைவர் அனைவரையும் கவர்ந்திழுத்தார். மிகத்தீவிரமாக தமிழ் ஈழத்தை ஆதரித்தும், இலங்கையைக் கண்டித்தும் கோஷம் எழுப்பிய அவர் பேசிய பேச்சுதான் அட்டகாசமானது.
அவரது பெயர் நாகராஜ். பெரியார் பேருந்து நிலையத்திற்கு சவாரி வந்தவர். வந்த இடத்தில் நடந்த தமிழ் ஈழ ஆதரவு போராட்டத்தைப் பார்த்து அதில் இணைந்து கொண்டார். சுமார் 5 மணி நேரம் போராட்டத்தில் அவர் பங்கேற்றார்.
அப்போது அவர் திரண்டிருந்த மாணவர்களிடம் தனது ஆட்டோ மீது ஏறியபடி பேசுகையில், தம்பிகளா இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சிக்கிட்டு குமுறிகிட்டு இருந்தேன்பா..... நீங்கல்லாம் போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தாம்ப்பா நிம்மதியா இருக்கு.

இனிமேல் மதுரைல உங்க போராட்டம் நடக்கும் போது போன் போடுங்க .. நேரம் கிடைக்கும் போது கலந்துக்குறேன். எப்பாடு பட்டாவது ஈழ மக்களுக்கு நல்லது ஏதாவது நடக்க வைக்கணும்யா"என்றாரே பார்க்கலாம்.
நாகராஜ் தனது ஆட்டோவின் பின் புறத்தில் பிரபாகரன் துப்பாக்கியால் சுடுவது போல் படம் வைத்து மதுரை வீதிகளை பல ஆண்டு காலமக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி ,செங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் இன்று இவரைப்போல் மனம் படைத்த சுமார் 750.ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தொடரும் போராட்டங்கள்
ஈழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சின்னங்குடி மீனவர்கள் 300 பேர் 60 படகுகளில் கடலுக்குள் உண்ணாவிரதம் இருந்தனர்.
மீனவர்கள் கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலையில் படகுகளை நிறுத்தி அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.மீனவ பெண்கள் 500 பேர் சின்னங்குடி கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
வருமான வரி அலுவலகம் முற்றுகை
இன்று (22.03.2013) தூத்துக்குடியில் மாணவர் கூட்டமைப்பு சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களால் தூத்துக்குடி வருமானவரி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது
பொதுவாக்கெடுப்பு
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் பொது வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்துஅவர்கள் கூறுகையில், தமிழ் ஈழம் உருவாக்க இந்தியா பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சிகளை ஐ.நா. சபை மூலம் எடுக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்பப் பெறவேண்டும் என்று கூறினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications