அடையாறு புற்றுநோய் மையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தை தரம் உயர்த்தி சிறப்பு மையமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சென்னை அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தை தரம் உயர்த்துவது தொடர்பாக நான் ஏற்கனவே விடுத்த கோரிக்கை நிலுவையில் உள்ளது. அது பற்றி மீண்டும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
12-வது திட்ட காலத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்தை தேசிய அளவில் தன்னாட்சி புற்று நோய் ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற எனது கோரிக்கை மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டு அது நிலுவையிலேயே உள்ளது.
இந்த புற்று நோய் மையமானது தன்னார்வ அறக்கட்டளை சார்பில் 1954-ம் ஆண்டு மறைந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சீரிய தலைமையின் கீழ் தொடங்கப்பட்டது. இது தமிழக அரசின் உதவியுடன் தன்னார்வ தொண்டு அமைப்பாக 3 தலை முறையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இங்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். எனவே இனிமேலும் மூன்றாந்தரமான சிகிச்சை மையமாக இது நீடிக்கக்கூடாது.
உலக நலவாழ்வு அமைப்பு, அடையாறு புற்றுநோய் சிகிச்சை நிறுவனத்தை, இந்தியாவின் சிறந்த சிகிச்சை மையமாக அங்கீகரித்துள்ளது.
எனவே, அடையாறு புற்றுநோய் சிகிச்சை நிறுவனத்தை, தன்னாட்சி அந்தஸ்து மிக்க தேசிய சிகிச்சை மையமாக தரம் உயர்த்த வேண்டும் என பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications