இலங்கை விவகாரம்: அடுத்த கட்ட போராட்டம் குறித்து திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆலோசனை
திருச்சி: இலங்கை விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அடுத்த கட்ட போராட்ட முன்னெடுப்புகள் பற்றிய மாநிலம் தழுவிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி சட்டக் கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான சீ.தினேஷ், சிபி லட்சுமணன் ஆகியோர் அனைத்துக் கல்லூரி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கூட்டத்தில் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கோ.திவ்யா, இளையராஜா ஆகியோரும் பங்கேற்று மாணவர்கள் போராட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
மாணவர்கள் இதுநாள் வரை நடத்திய போராட்டங்களின் போது மத்திய- மாநில அரசுகளின் பிரதிநிதிகள் தங்களை சந்தித்து பேச வேண்டும் என்றும், அப்போது ஈழத் தமிழர்களின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இது தொடர்பாக யாரும் மாணவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். இதனால் கல்லூரிகளை உடனடியாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வி துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications