வேலையில் மூழ்கி திருமணத் தேதியை மறந்ததால் நின்று போன திருமணம்- சீனாவில் நடந்த வேடிக்கை
பீஜிங்: வேலையில் மும்முரமாக ஈடுபட்டவர், திருமண தேதியை மறந்ததால், திருமணம் நின்று போனது.
வேலையில் மூழ்கிவிட்டால், சிலருக்கு உலகமே மறந்து விடும், அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், சீனாவை சேர்ந்தவர் டேங் ஜின்ஷி. இவருக்கும், ஷாங் என்ற பெண்ணுக்கும், கடந்த 13ம் தேதி, திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், வேலை பளுவால், தன் திருமண தேதியை மறந்தார் டேங் ஜின்ஷி. இதனால், இவரது திருமணம், அன்றைய தினம் நடைபெறவில்லை. காலங்கடந்து திருமணத் தேதி நினைத்துக் கொண்ட ஜின்ஷி, மணமகளிடம் மன்னிப்பு கேட்டு, கடிதம் எழுதியுள்ளார்.
திருமண நடைபெற உள்ள நாளை கூட மறந்துவிட்ட ஜின்ஷியை, இணையதளத்தில் ஏராளமானவர்கள் திட்டித் தீர்த்துள்ளனர். ""திருமண தேதியை மறந்துவிட்டு, அவர் என்ன வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாரா?'' என, ஒருவர் கேலி செய்துள்ளார். இன்னொருவர், ""இந்த ஆளெல்லாம் திருமணத்துக்கு லாயக்கு இல்லாதவர்,'' என, சாடியுள்ளார். எனினும், ""ஷாங்! நாங்கள் அனைவரும் அவரை மன்னித்து விட்டோம்; நீயும் மன்னித்து விடு,'' என, கருணையுள்ளம் கொண்ட ஒருவர், கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு, மணமகள் என்ன பதில் சொன்னார் என்ற தகவல் இல்லை.
-
இதுவரை 17 கல்யாண பத்திரிக்கை வந்திருக்கு மே 28ம் தேதிக்கு.. ஜூன் மாதம் உலகம் அழிய போகுதா? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications