வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும்: ராமதாஸ்
ஊட்டி: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள, ஒரு தனியார் ஓட்டலில் அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
கூட்ட முடிவில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காதல் ஹார்மோன்:
பெண்கள் மற்றும் ஆண்கள் 14 வயது முதல் 19 வயது வரை ஹார்மோன் கோளாறு காரணமாக எளிதாக காதல் வலையில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
பெற்றோர் பாவம்:
காதலை பயன்படுத்தி பல மாவட்டங்களில் பெண்களை திருமணம் செய்து பின்னர் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் பெற்றோர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
திருத்தம் தேவை:
இந்த நிகழ்வுகளில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இதனால் அப்பாவி பெற்றோர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஆர்ப்பாட்டம்:
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் கோரிக்கையை வலியுறுத்தியும், காதல் நாடக திருமணங்களால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் நிலைகுறித்தும் அறிய தனி நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அடுத்த மாதம் (ஏப்ரல்) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் மே மாதம் முதல் வாரத்தில் டெல்லியில் மிகப்பெரிய போராட்டமும் நடத்தப்படும்.
அரசியல் சார்பற்றது:
இந்த இயக்கம் முழுக்க, முழுக்க அரசியல் சார்பற்றது. எஸ்.சி. மக்களை எதிர்த்து நடக்கும் இயக்கம் இது அல்ல. அரசியல் சட்டத்தில் எஸ்.சி. மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். எஸ்.சி. இயக்கத்தை நடத்தும் தலைவர்கள் சுவாமி விவேகானந்தரை போல் தங்களது இன இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
தவறான வழிகாட்டல்:
ஒரு சில தலைவர்கள் நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையில் இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும், பெண்கள் காதல் திருமணம் செய்தாலும், பெற்றோர்களின் சம்மதத்தை பெற வேண்டும், இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நீதிபதியின் ஒப்புதல்:
ஆண்களுக்கு திருமண வயதாக 23-ம், பெண்களுக்கு திருமண வயதாக 21-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிபதியின் ஒப்புதல் பெற்றே வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்யக்கூடாது இன டாக்டர் ராமதாஸ் கூறினார்.
மேலும் பலர்:
கூட்டத்தில் கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, தென் பாண்டி சீமை தலைவர் அரசக்குமார், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, கொ.மு.க. மாநில பொதுசெயலாளர் ஜி.கே.நாகராஜ், கொங்கு இளைஞர் பேரவை குமார் ரவிகுமார், படுகர் அமைப்பின் சார்பில் பேராசிரியர் குள்ளன், முதலியார்பிள்ளை அமைப்பு சார்பில் கே.என்.ராஜன், தெலுங்கு செட்டியார் அமைப்பு சார்பில் ராஜ்குமார், தோடர் இன மக்கள் சார்பில் சத்யராஜ், ஆல்வாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications