அதிமுகவின் வெற்றிக்காக உழைத்த தேமுதிகவுக்கு ஏற்பட்ட இந்த நிலை... கருணாநிதி
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் தோழமை கொண்டு அவர்களின் வெற்றிக்காக உழைத்த தோழமைக் கட்சிக்கு ஏற்பட்ட நிலை இது. இதையொட்டி கடந்த காலங்களில் பேரவையில் நடைபெற்ற சில சம்பவங்களை நினைவூட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
24-11-1986ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில், மொழி போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்திய அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக, பேரவைத் தலைவர், திமுகவைச் சேர்ந்த பேராசிரியரையும் மற்றும் எஸ். பாலன், ஏ.செல்வராசன், பரிதி இளம்வழுதி, பி.பொன்னுரங்கம், கோவை எம்.ராமநாதன், தர்மபுரி ஆர்.சின்னசாமி, ஆலந்தூர் ம.ஆப்ரகாம், மதுராந்தகம் சி.ஆறுமுகம், அரக்கோணம் வி.கே.ராசு ஆகியோரையும் பேரவையிலிருந்து நிரந்தரமாக நீக்கி தனது தீர்ப்பை படித்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் கூட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற அன்றைய ஆளும் கட்சியான அதிமுக கடைசிவரை முன்வரவில்லை.
28-12-1988ல் சட்டப் பேரவையில் நடைபெற்றது என்ன? ஜா அணியினரும், ஜெ அணியினரும் அவையில் உள்ள மைக்குகளைக் கையில் பிடுங்கிக் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு, பேரவை வரலாற்றில் இல்லாத மிகப் பெரிய ரகளையைச் செய்ததை தமிழகம் மறந்துவிட்டதா என்ன?. உள்கட்சி விவகாரம் சட்டப்பேரவைக்கு வந்து ஊர் சிரித்ததைப் பார்த்து நாடே சிரித்தது.
மற்றொரு உதாரணம் 1991ம் ஆண்டு சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியில் ஜூலை 4ம் தேதி ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையாற்றத் தொடங்கிய போது, பாமக உறுப்பினராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு அறிக்கையை அவையில் ஆங்கிலத்தில் படிக்கத் தொடங்கினார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications