அவைக் காவலர்களை எட்டி உதைத்து, தொப்பிகளை பறித்து...

Subscribe to Oneindia Tamil

அதில் ஒருவர், அவைக் காவலர்களை எட்டி உதைத்து, தொப்பிகளை பறித்து அவர்கள் முகத்தில் அடித்தார். அந்தப் புகைப்படங்கள் ஏடுகளில் அப்போதே வெளிவந்தன. ஆளுநர் உரையாற்றிய போது அத்து மீறிச் செயல்பட்ட அதிமுக உறுப்பினர்கள் 9 பேரை மாதக் கணக்கிலோ, ஆண்டுக் கணக்கிலோ அல்ல அந்தத் தொடர் முழுவதும் நீக்கம் செய்து பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாள் என்ன நடந்தது தெரியுமா?. முதலமைச்சராக இருந்த நான் மறுநாள் பேரவையில் கூறும்போது, பேராசிரியர் உள்ளிட்ட 10 திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டவர்களை மீண்டும் அந்த ஆட்சியில் அனுமதிக்கவில்லை. ஆனால் வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டுமென்று அண்ணா வழியில் நடைபெறுகின்ற இன்றைய திமுக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தேன்.

மற்றொரு நிகழ்ச்சி 18-10-2007ல் காலை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு உரிமை மீறல் பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து பயங்கரமாக கூச்சலும், குழப்பமும் விளைவித்து, அவரைப் பேச விடாமல் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளை விட்டுக் கும்பலாக எழுந்து, பேரவைத் தலைவரின் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார்கள். பேரவைத் தலைவர் பலமுறை அவர்களை இருக்கைக்குத் திரும்புமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டும் அவர்கள் திரும்பாத காரணத்தினால், பேரவைத் தலைவர் அவைக் காவலர்களை அழைத்து, அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

அப்போது திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் தன்னை அப்புறப்படுத்த வந்த காவலர் பி.மதிவாணனின் தொப்பியை பிடுங்கி, பேரவைத் தலைவர் மீது தூக்கி எறிந்தார். அதை அவை உறுப்பினர்கள் அனைவரும் பார்த்தார்கள். பேரவைத் தலைவரையே தாக்கிய அந்தச் செயலுக்காக திமுக ஆட்சியில் முதலில் 6 மாத காலத்திற்கு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்ட போதிலும், நான் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கூட்டத் தொடர் தவிர அடுத்த கூட்டத் தொடரின் முதல் 10 நாள்களுக்கு மட்டும் நீக்கம் செய்தால் போதும் என்று கூறி அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது. இது திமுக ஆட்சியில் நடைபெற்ற மற்றொரு உதாரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+