வஞ்சிரம் பெருசு 600... சிறுசு 250 - அய்லா 120, கட்லா 80..சுருக்கென குத்தும் மீன் விலை
சென்னை: மீன் பிரியர்களுக்கோர் கெட்ட செய்தி.. சென்னையில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. விற்பனையில் ஏற்பட்ட மந்தமே இந்த விலை உயர்வுக்குக் காரணமாம்.
பெளர்ணமி,பங்குனி உத்திரம்,புனித வெள்ளி என அடுத்தடுத்து விசேஷ நாட்கள் வந்ததால் மீன் விற்பனையில் சற்றே மந்த நிலை.
மேலும் மீன் வரத்தும் குறைந்து விட்டது. இதனால் விலை உயர்ந்து வருகிறது.

30 லோடுக்குப்பதில் 10தான்
சென்னை வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு வழக்கமாக தினந்தோறும் 30 லாரிகள் வரை மீன்லோடு வருமாம். சென்னை காசிமேடு, ராமேஸ்வரம் உள்ளளிட்ட ஊர்களிலிருந்து இவை வரும். ஆனால் இன்று 10 லாரி மட்டும்தான் வந்ததாம்.

பெரிய வஞ்சிரம் ரூ. 600
தற்போது இந்த மார்க்கெட்டுக்கு மீன் வாங்கப் போனால் இந்த ரேட்டுக்கு மீன் வாங்கலாம். அதாவது பெரிய வஞ்சிரம் கிலோ ரூ. 600க்கு விற்கிறது. சங்கரா மீ்ன் கிலோ ரூ. 80, கட்லா கிலோ ரூ 70, சின்ன வஞ்சிரம் ரூ. 250, இறால் கிலோ ரூ. 250, நண்டு கிலோ ரூ. 90க்கு விற்கிறது. ஆனால் இது மொத்த விலை. சிலல்லறை வியாபாரிகள் இதை விட கூடுதலாக வைத்து விற்பார்கள்.

மீன் வரத்து குறைவு
தற்போது கடலில் மீன் இருப்பு நிலவரம் சரியில்லை. சரியான அளவில் மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் மீனவர்கள் பெரும் ஏமாற்றமும்,நஷ்டமும் அடைகின்றனர்.

ஏற்றுமதிக்குப் போகும் மீன்கள்
மேலும், ஏற்றுமதிக்கு நிறைய மீன்கள் சென்று விடுவதால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவில் மீன்கள் வருவதாகவும், இதனால் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறறது.

போராட்டத்தாலும் மீன் வரத்து இல்லை
மீன்கள் அதிகம் கிடைக்கக் கூடிய ராமேசுவரம், தூத்துக்குடி பகுதிகளில் மீனவர் போராட்டம் காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து நிறைய மீன்கள் வருவதில்லை

மீன் உற்பத்தி நிலவரம்
இதற்கிடையே, இந்தியாவில் மீன் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறதாம். 2011-12ல் இது 8700 டன்னாக இருந்தது. இது 2005-06ல் 6572 டன்னாக இருந்ததாம்.












Click it and Unblock the Notifications