For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடகொரியாவின் பதிலடிக்கு தயாராக இருக்க வேண்டும்: தென்கொரியா அதிபரும் உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

South Korea vows fast response to North
சியோல்: கொரிய தீபகற்பத்தில் போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய சூழல் நீடித்து வருகிறது. வடகொரியா அறிவித்த போர் பிரகடனத்தை ஏற்று பதிலடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவத்துக்கு தென்கொரியாவின் அதிபர் பார்க் ஜியூன் ஹை உத்தரவிட்டிருக்கிறார்.

கொரியா தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியா, தென்கொரியா நாடுகள் இடையே அண்மைக்காலமாக மோதல் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை, ராக்கெட் ஏவுதல் போன்ற நடவடிக்கைகளால் வடகொரியா பொருளாதார தடைக்கு ஆளாகி இருக்கிறது. இந்த நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதால் வடகொரியா கடும் கோபத்தில் இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா போர் ஒத்திகை நடத்துகிறது. இதில் அமெரிக்காவின் அதிநவீன பி-2, எப்-22 போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தென்கொரியாவுடன் போர் பிரகடனத்தை வெளியிட்டது. இதனால் கொரியா தீபகற்ப பகுதியில் போர் மூளும் நிலைமை உருவானது.

வடகொரியாவின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தென்கொரியாவும் தயாராகிவிட்டது. தென்கொரியா நாட்டு பெண் அதிபர் பார்க் ஜியூன் ஹை ராணுவ அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது வடகொரியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்க ராணுவம் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதனால் அமெரிக்காவின் துணையுடன் வடகொரியா மீது தென்கொரியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

English summary
South Korea's new president vowed on Monday to strike back quickly if North Korea stages any attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X