சூறைக்காற்று + மழை.. பெங்களூருவுக்கு அடுத்த 6 நாள் ரொம்ப முக்கியம்.. வானிலை மையம் தந்த ‘அலர்ட்'
பெங்களூர்: பெங்களூர், பெங்களூர் புறநகர் மாவட்டம் உள்பட கர்நாடகா முழுவதும் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கத்தை விட வெப்பம் தணிந்து குறைந்து காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆலங்கட்டி மழை பெய்தது. அதன்பிறகு மழை என்பது இல்லை. ஆங்காங்கே அவ்வப்போது லேசாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 6 நாட்கள் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

21ம் தேதி வரை மழை
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களில் மே 16 (இன்று) முதல் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 21ம் தேதி வரை தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெங்களூரில் மழை
அதேபோல் குடகு, சிக்கமளூரு, ஹாசன், சிவமொக்கா, மைசூர், சாமராஜ்நகர், பெங்களூர் பெங்களூரு புறநகர், சிக்கபள்ளாப்பூர், கோலார், ராமநகர், மண்டியா துமகூரு, தாவணகெரோ, சித்ரதுர்கா, விஜயநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகர்நாடகாவில் மழை
வடகர்நாடகா மாவட்டத்தை எடுத்து கொண்டால் ராய்ச்சூர், யாதகிரி, விஜயாப்புரா, கலபுரகி, கதக், கொப்பல், பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மட்டுமின்றி மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை தார்வார், கதக் மாவட்டங்களில் லேசனனது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வழக்கத்தை விட குறைந்த வெப்பம்
பெங்களூரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆலங்கட்டி மழை பெய்தது. அதன்பிறகு நகரில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டு வருகிறது. நேற்று மாலையில்பெங்களூர் நகரின் வெப்பநிலை 30.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இது வழக்கத்தை விட 2.4 டிகிரி செல்சியஸ் குறைவாகும்.
தொடர்ந்து மழை பெய்ய உள்ளதால் பெங்களூர் நகரின் வெப்பநிலை இந்த முறை குறைந்தே காணப்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications