ராசிபுரத்தில் கேரள மாணவர் காரை ஏற்றி கொலை: 7 மாணவர்கள் கைது
நாமக்கல்: காரை ஏற்றி மாணவரை கொலை செய்த, 7 கல்லூரி மாணவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.
நாமக்கல் அடுத்த ராசிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவரும் கேரள மாணவர்கள் தீபக் (21), தினேஷ்(21), இவர்களுக்கும் மற்றொரு மாணவர்கள் கோஷ்டிக்கும் தகராறு இருந்துள்ளது.
நேற்று மாலை தீபக், தினேஷ் ஆகிய இருவரும் பைக்கில் சேலம், நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் தீபக் ச்ம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த தினேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துச் சம்பவம் விபத்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மோதிய கார் ஓமலூர் செக்போஸ்டில் பிடிப்பட்டது. விசாரணையில் தீபக் மீது காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 7 கல்லூரி மாணவர்களை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications