For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமலா ஹாரீஸ் பற்றி கமென்ட்... மன்னிப்பு கேட்ட ஒபாமா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Obama
வாஷிங்டன்: அட்டர்னி ஜெனரல் கமலா ஹரீஸ் பற்றி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் பணிபுரிந்து வருபவர் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ். வியாழன் அன்று, வாஷிங்டனில் அதிபர் ஒபாமாவுடன் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ஒபாமா அவரது பணியாற்றும் திறமையையும், அழகையும் புகழ்ந்தார். சமூக வலைத்தளங்கள், இணையதளங்களிலும் உடனடியாக இது தொடர்பான செய்திகள் வெளியாகின. முக்கிய பொறுப்பில் இருப்பவரின் அழகை அதிபர் வெளிப்படையாக புகழ்ந்தது தவறான செயலாகும் என்ற கருத்து எழுந்தது.

பொது மேடையில் பெண்களின் அழகை வர்ணிப்பது அதிபர் பதவிக்கு கண்ணியமான செயல் அல்ல என அமெரிக்க ஊடகங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து அதிபர் ஒபாமா கமலாவிடம் நேற்று மன்னிப்பு கேட்டதாக வெள்ளைமாளிகை அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

தன்னுடைய கருத்தால், அவரது செயல்பாடுகளையோ, திறமையையோ குறைவாக மதிப்பிடப்படமுடியாது என்று அதிபர் கருதியதாக அவரின் சபா காரியதரிசியான ஜே கார்னே கூறினார். அதிபரின் மன்னிப்பை கமலா ஏற்றுக் கொண்டாரா என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

English summary
President Barack Obama late on Thursday night called Kamala Harris, the California attorney general, and apologised to her for saying that she was the "best-looking attorney general in the country."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X