For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் பிடிக்க வந்ததால் பயந்து மாடியிலிருந்து கீழே குதித்து காயமடைந்த கள்ளக்காதலர்கள்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ஊரை விட்டு ஓடி வந்து கன்னியாகுமரியில் குடித்தனம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி, போலீஸார் தங்களைப் பிடிக்க வந்ததால் பயந்து போய் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்தனர். இதில் பெண்ணின் கால் எலும்பு முறிந்து போனது.

விழுப்புரம் மாவட்டம் கைபானிகுப்பம் பகுதியை சேந்தவர் சந்திரா, 25 வயதாகும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் கட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற 25 வயது வாலிபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார் சந்திரா.

இருவரும் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். இதனால் சந்திரா தனது குடும்பத்தை அம்போவென விட்டுவிட்டு ராஜேஷுடன் கிளம்பி விட்டார். நேராக கன்னியாகுமரி போனார்கள். அங்கு கட்டப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரைச் சந்தித்தனர். அவர் ஒற்றையால்விளையில் ஒரு வீட்டைவாடகைக்குப் பிடித்துக் கொடுத்தார். அங்கு தங்கிக் கொண்டனர். வேலையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் போலீஸார் சந்திராவையும், ராஜேஷையும் தேட ஆரம்பித்தனர். கன்னியாகுமரிக்கு வந்தனர். இதற்கிடையே, சந்திரா, ராஜேஷ் மீது சந்தேகம் கொண்ட அக்கம்பக்கத்தினர் போலீஸில் தகவல் கொடுத்தனர். இதை அறிந்த சந்திராவும், ராஜேஷும், ஆட்டோ டிரைவரை அணுகினர். அவர் தனது வீட்டின் மாடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார்.

போலீஸார் ஆட்டோடிரைவர் வீட்டுக்கும் வந்து விட்டனர். அவரிடம் விசாரணை நடத்தினர். இதைப் பார்த்துப் பயந்து போன சந்திராவும், ராஜேஷும், அங்கிருந்து தப்பிச் செல்ல தீர்மானித்து மொட்டை மாடியிலிருந்து குதித்தனர். இதில் சந்திராவின் கால் முறிந்து போனது, எலும்பு உடைந்து போனது. ராஜேஷ் லேசான காயமடைந்தார்.

சந்திராவை தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உறவினர்கள் தற்போது கன்னியாகுமரி வந்துள்ளனர்.

தேவையா இது...!

English summary
A woman who was staying with her paramour was injured while jumping from a roof top after police came to nab them near Kanniyakumari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X