20 ரூபாய் அரிசி திட்டம்: 17ம் தேதி சென்னையில் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்

தமிழகத்தில் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ அரிசி ரூ. 45 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம், அரிசியை கிலோ 20 ரூபாய் என்ற விலையில் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, சட்டசபையில் உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
இதையடுத்து வெளிச்சந்தை விலையை விட குறைவாக ஒரு கிலோ அரிசி 20 ரூபாய் விலையில் ஐந்து கிலோ பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய உணவு துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 50 கடைகளும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 50 கடைகளும் திறக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா வரும் 17ம் தேதி நந்தனத்தில் உள்ள ஒரு கடையில் 20 ரூபாய் அரிசி திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். மக்களின் வரவேற்பை பொறுத்து இத்திட்டம் மற்ற மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மத்திய அரசிடம் இருந்து வெளிச்சந்தை சிறப்பு திட்டத்தின் கீழ் தரமான பொன்னி அரிசி 19 ரூபாய் என்ற விலையில் வாங்கி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதற்காக ஒரு லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த அரிசி விற்பனைக்காக தனி கடைகள் திறக்கப்படும். இதில் மற்ற பொருட்கள் எதுவும் விற்பனை செய்யப்படாது என்றார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications