மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: சைபுனிஷா கோரிக்கை நிராகரிப்பு! சரணடைய சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சைபுனிஷா நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. மேலும் நாளை மறுநாளுக்குள் அவர் நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி வெளியிட்டது. அதில், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதுபோல், தற்போது 71 வயதாகும் சைபுனிஷாவுக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 4 வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் சரண் அடையவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தாம் நீதிமன்றத்தில் சரண் அடைய மேலும் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சைபுனிஷா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் ஏற்கெனவே விதித்த உத்தரவுப்படி, ஏப். 18ந் தேதிக்குள் சரண் அடைய வேண்டும் என்றும் சைபுனிஷாவுக்கு உத்தரவிட்டனர். மேலும் இதேபோல் சரணடைய கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேலும் 2 மனுக்களையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications