டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட மாணவிக்கு என்டி டிவியின் 'இந்தியாவின் மகள்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவிக்கு "இந்தியாவின் மகள்" விருது வழங்கி என்டிடிவி கௌரவித்துள்ளது.

என்டிடிவியின் இந்தியன் ஆஃப் தி இயர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் பலியான 23 வயது பிஸியோதெரபி மாணவிக்கு இந்தியாவின் மகள் விருது வழங்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணின் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது அப்பெண்ணின் தாயார் தன்னுடைய ஒரே கோரிக்கை இந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரைப் பார்த்து கண்ணீருடன் தெரிவித்தார்.

அன்றைய தினம் பேருந்தில் மாணவியுடன் இருந்து தாக்குதலுக்குள்ளான நண்பரும் விழா மேடையில் இருந்தார். எந்த சட்டத்தாலும் இழந்து போன என் தோழியை திரும்ப கொண்டு வர இயலாது, இனி மீண்டும் இவ்வாறு ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்வதே என் தோழியின் தியாகத்திற்கு செய்யும் சரியான மரியாதை என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+