5 வயது சிறுமி கற்பழிப்பு: விஷயத்தை அமுக்க பெற்றோருக்கு போலீஸ் லஞ்சம் கொடுத்த கொடுமை!
டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் 2 நாட்களாக பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது. இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க சிறுமியின் பெற்றோருக்கு போலீசார் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 15ம் தேதி காணாமல் போனார். இதையடுத்து அவரை கண்டுபிடித்துத் தருமாறு சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பக்கத்து வீட்டில் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் வந்தது.
இதை கேட்ட அவரது பெற்றோர் பக்கத்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு, அவரது மர்ம உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியை கடத்தி 2 நாட்களாக கற்பழித்த பக்கத்து வீட்டுக்காரர் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். முன்னதாக இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க சிறுமியின் பெற்றோருக்கு போலீசார் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர்.
இது குறித்து சிறுமியின் குடும்பத்தார் கூறுகையில்,
முதலில் போலீசார் வழக்குப் பதிவு செய்யத் தயங்கினர். அது தான் சிறுமி உயிருடன் கிடைத்துவிட்டாள் அல்லவா அதற்காக சந்தோஷப்படுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய காவல் நிலையம் சென்றோம். அவர்கள் என்னவென்றால் சிறுமி கிடைத்ததற்காக சந்தோஷப்பட்டு அவள் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்றனர் என்றார்கள்.
-
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications