ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பி.எஸ்.டி.சாய் தலைமையில் நிபுணர் குழு அமைப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக டை ஆக்சைடு என்ற நச்சு வாயு வெளியேறியதை அடுத்து கடந்த மார்ச் 30 ஆம் தேதி ஆலையை மூடும்படி மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஸ்டெர்லைட் சார்பில் மனு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், வைகோ, தூத்துக்குடி பாத்திமா பாபு, வழக்கறிஞர்கள் பிரகாஷ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தனித்தனியே மனு செய்திருந்தனர். அவர்களும் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர்.
மனு மீதான விசாரணையின் போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இன்று அந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவை நீதிபதிகள் அறிவித்தனர். இந்தக் குழுவின் தலைவராக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிபுணர் கமிட்டியில் ஐஐடி பேராசிரியர் ரெஜி பிலிப் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு உதவுவதற்கு மாசு கட்டுப்பட்டு வாரிய பிரதிநிதியாக மோகன் நாயுடு என்பவரும், ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பொதுமேலாளர் சுமதி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழு, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கி,அதன் வாயு வெளியேற்றம், பாதிப்பு, தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் 29 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications