வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.19,665 கோடி தர ஜெயலலிதா கோரிக்கை

முதல் - அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
வறட்சி கோரிக்கை மனு ஒன்று மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பப்படும். இந்த வறட்சி கோரிக்கை மனுவில், வேளாண்மைத் துறையில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டதற்காக 9,286 கோடியே 20 லட்சம் ரூபாய்; விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை மாற்றியமைத்த வகையில் கூட்டுறவு துறைக்கு 182 கோடியே 10 லட்சம் ரூபாய்;
விவசாயிகளுக்கு பயிரிழப்பு நிவாரணம் வழங்கிய வகையில் மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவினத்திற்காக 1,376 கோடியே 71 லட்சம் ரூபாய்; வேளாண்மை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களுக்காக 2,424 கோடியே 47 லட்சம் ரூபாய்; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு இழப்பீடாக 2,661 கோடியே 32 லட்சம் ரூபாய்; வன விலங்குகளை பாதுகாப்பதற்காக 5 கோடி ரூபாய்; குடிநீர் வழங்கல் பணிகளுக்காக 1,195 கோடியே 79 லட்சம் ரூபாய்; கால்நடை பராமரிப்பு துறைக்கென 247 கோடியே 16 லட்சம் ரூபாய்; பண்ணை குட்டை மீன் வளர்ப்புக்கென 12 கோடியே 47 லட்சம் ரூபாய்; பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பிற்கென 1,390 கோடியே 31 லட்சம் ரூபாய்; ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் சத்துணவு வழங்க 333 கோடியே 60 லட்சம் ரூபாய்; பொது விநியோகத் திட்டத்திற்கென 7.92 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 550 கோடி ரூபாய்; என மொத்தம் 19,665 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கான நிவாரண கோரிக்கைகள் அடங்கும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications