பச்சைகலரு சிங்குசா... மஞ்சக்கலரு சிங்குசா...ஆறுமாசமா விதவிதமா லிப்ஸ்டிக் போட்டு கலக்கும் வினோதப்பெண்
லண்டன்: ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம்.. இந்தப் பெண்ணுக்கோ வினோதமான பழக்கம். அதாவது ஒவ்வொரு நாளும் தனது உதடுகளுக்கு ஒரு லிப்ஸ்டிக் போட்டு அதைப் படம் எடுத்து தனது பிளாக்கில் போட்டு வருகிறார் இப்பெண். இப்படி போட ஆரம்பித்து 6 மாதமாகி விட்டதாம். இப்படியே ஒரு வருடத்தை முடிக்கப் போகிறாராம் இப்பெண்.
அதை தனது பிளாக்கிலும் (http://www.beautypassionista.co.uk/) தினந்தோறும் வெளியிட்டும் வெளியிட்டு வருகிறார்.
கேட்கவே வித்தியாசமா இருக்குல்ல. ஆனால் இதை சீரியஸாக செய்து வருகிறார் இப்பெண்.
அப்பெண்ணின் பெயர் அம்பாரினா ஹசன். இதுவரை 182 வகையான லிப்ஸ்டிக்குகளால் தனது உதடுகளை அலங்கரித்து விட்டார் இப்பெண். இன்னும் நீள்கிறது இவரது உதட்டுச் சாய ஆசை. தனது பிளாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் இதை ஆவணப்படுத்தி வருகிறார் அம்பாரினா.

ஆரம்பத்தில் ஆர்வம் இல்லை
ஆரம்பத்தில் விதம் விதமாக லிப்ஸ்டிக் போடுவதில் அம்பாரினாவுக்கு ஆர்வம் இருந்ததில்லையாம். ஆனால் தற்போது இதை ஒரு வேள்வி போல செய்து வருகிறாராம்.

6 மாதம் ஓவர்..ஒரு வருடத்திற்கு இலக்கு
இதுவரை 6 மாதத்தை அவர் ஓட்டி விட்டார். தினசரி ஒருலிப்ஸ்டிக்கை தனது உதடுகளில் பதிக்கிறார் இவர். ஒரே கலரை அடுத்த நாள் அப்ளை செய்வதில்லையாம். தினசரி ஒரு கலராம், ஒரு ரகமாம். ஒரு வருடம் வரை இந்த லிப்ஸ்டிக் உலா தொடருமாம்.

பிளாக்கில் புகைப்பட தொகுப்பு
பியூட்டி பேசனோனிஸ்டா என்ற பெயரிலான தனது பிளாக்கில் இந்தப் படங்களை அவர் தினசரி போட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் இடம் பெறச் செய்கிறார்.

தினசரி ஒரு மகிழ்ச்சி
இந்த வினோதப் பழக்கம் குறித்து அம்பாரினா கூறுகையில், எனக்கு இது புத்துணர்ச்சி தருகிறது. புது மகிழ்ச்சி தருகிறது. தினசரி புதுப் பெண்ணாக என்னை உணர்கிறேன் என்றார்.

மூடு மாறும்
தினசரி லிப்ஸ்டிக் போடுவதன் மூலம் மூடு மாறுவதாகவும், அது மனதுக்கு இதமாக இருப்பதாகவும் கூறுகிறார் இந்த பாகிஸ்தான் பெண்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications