நீதிபதிகளை சிறைபிடித்த வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கைது- நீதிமன்ற காவலில் வைப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்துவிட்டு தற்போது தாய்நாட்டில் நடக்கும் தேர்தலில் போட்டியிட நாடு திரும்பியுள்ளார். தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் முஷாரப் அதிபராக இருக்கையில் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்திய கையோடு தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி உள்பட 60 நீதிபதிகளை சிறை வைத்தார்.
இது குறித்து வழக்கறிஞர் சவுத்ரி முகமது அஸ்லம் கும்மான் என்பவர் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் முஷாரப் நாடு திரும்பியவுடன் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி முஷாரப் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சௌகத் அஜீஸ் சித்திக்கி அதை தள்ளுபடி செய்தார். மேலும் அவரை கைது செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்த முஷாரப் தனது பாதுகாவலர்களுடன் குண்டு துளைக்காத காரில் ஏறி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து அவர் பண்ணை வீட்டுக்கு சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் முஷாரபை கைது செய்ய அவரது பண்ணை வீட்டுக்கு விரைந்தனர். இந்நிலையில் இன்று காலை அவரை பண்ணை வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். முஷாரப்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரது வீட்டை உப சிறையாக அறிவிக்குமாறு போலீசார் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர். இதை அரசு ஏற்கவுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications