சவூதியில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு...
ரியாத்: சவூதியில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை உடனடியாக அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜூன் 9ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும் முறையாக ஸ்பான்சர் மாற்றாமல் பணிபுரிபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவூதி அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவூதியில் இயற்றப்பட்டுள்ள ‘நிதாகத்' எனும் புதிய சட்டத்தின்படி, சவூதியில் சட்ட விரோதமாக அல்லது சிகப்பு கேட்டகிரி மற்றும் தனி விசா உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு மூன்று மாத கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் தாயகம் செல்ல சவூதி இந்திய தூதரகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி, தனி ஸ்பான்சரின் (கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு கேட்டகிரியில் இருப்பதால் தாயகம் செல்ல முடியாத பிரச்சனையில் உள்ளவர்கள், பாஸ்போர்ட், இக்காமா காலாவதி ஆனவர்கள் மற்றும் ஹுரூப் கொடுக்கப்பட்டவர்கள், மேலும் விசா விபரம் தெரியாமல் பணியாற்றிவிட்டு தாயகம் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், இவர்கள் அனைவரையும் கவனத்தில் கொண்டு உரிய சட்ட உதவிகள் செய்திட இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது.
சவூதி அரசு கொடுத்துள்ள 3 மாத காலத்திற்குள் சவூதி அரசுடன் பேசி பாதுகாப்பாக தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ள இவ்வேளையில், மேற்கண்ட வகைகளில் சட்ட விரோதமாக சவூதியில் வாழும் இந்தியர்கள் தங்களது தகவல்களை உடனே இந்தியத் தூதரகத்திற்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒரிஜினல் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு ஈசி தேவையில்லை. அந்த பாஸ்போர்ட்டிலேயே எக்சிட் அடித்து அனுப்பி வைக்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள வகையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தை அணுகவும்.
அல்லது 4884032 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மின் அஞ்சல் முகவரி:
மேலும் புதிய தகவல்:
இக்காமா, விசா, ஹுரூப் போன்ற பிரச்சனைகளில் சவூதி சட்டத்திற்கு புறம்பான வகையில் சவூதியில் தங்கி உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை அவரவர் நாட்டிற்கு அனுப்பும் (டிக்கட் போன்ற) செலவினங்களை சவூதி உள்துறை அமைச்சகம் (ஜவ்ஸாத் - General Directorate of Passports) ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130414161305
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications