உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிடுவதா? அமெரிக்காவிற்கு நிவெனிசுலா அதிபர் கண்டனம்

வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேசின் மறைவினை அடுத்து அங்கு கடநத சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் அவரது அரசியல் வாரிசான, நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றிக் கப்ரிலேஸ், ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டுமென்று பிரச்சாரம் செய்து வருகின்றார். அமெரிக்க அரசும், இதற்கு ஆதரவாக பேசி வருகிறது. மடூரோவின் வெற்றியை அங்கீகரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி,' வெனிசுலாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும். அங்கு பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தால், அங்குள்ள அரசாங்கத்தின் நம்பகத்தன்மை குறித்து நாங்கள் தீவிர கேள்விகளை எழுப்புவோம். இந்த பிரச்சினை இன்னும் முடியவில்லை.' என்று கூறினார்.
இந்த கருத்துக்கு நிக்கோலஸ் மடூரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு, குறிப்பாக தேர்தல் சமையத்தின் போது அவர்களின் தலையீடு இழிவானதாகவும் கொடூரமானதாகவும் இருக்கிறது என்றார்.
பூஸ்வாக்கள், நிலப்பிரபுகளுடன் இணைந்து கொண்டு அமெரிக்காவின் நடவடிக்கைகள் மிகவும் கேவலமானதாக இருக்கிறது. ஜான் கெர்ரி வெனிசுலாவை கவனிப்பதை விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் அங்கீகாரம் தனக்கு தேவையில்லை என்றும், அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன், வலதுசாரிக் கட்சியினர் திடீர் சதிப்புரட்சி ஒன்றுக்கு திட்டமிடுவதாகவும் மடூரோ குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுவேலா பொதுத் தேர்தல், உலகை மீண்டும் வலதுசாரி, இடதுசாரி முகாம்களாக பிரித்து வருகின்றது. இடதுசாரி தலைவர்கள் ஆளும் லத்தீன் அமெரிக்க நாடுகள், மடூரோவின் வெற்றியை அங்கீகரித்துள்ளன.
அமெரிக்காவை பின்பற்றி, வலதுசாரிக் கட்சிகள் ஆளும் ஸ்பெயினும், கொலம்பியாவும், இன்னபிற நாடுகளும் மடூரோவின் தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. மடூரோ மிகச் சிறிய ஒட்டு வித்தியாசத்தில் வென்றதை சுட்டிக் காட்டி, வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டுமென கோரி வருகின்றன.
இதற்கிடையே, வெனிசுவேலாவில், பெருந்தொகையான வாக்குச் சீட்டுகள், கியூபா மருத்துவர்கள் பணியாற்றும் இலவச மருத்துவமனைகளுக்குள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து, பல இலவச மருத்துவமனைகள் பாசிசக்யர்களினால் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. மறைந்த சாவேசின் ஆளும் கட்சியான, அலுவலகங்களும் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. இது வரையில், எட்டு PSUV கட்சி உறுப்பினர்கள்/ஆதரவாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர். மீண்டும் வாக்குகளை எண்ணுவதற்கு, தேசியதேர்தல் ஆணையகம் (CNE) மறுத்து விட்டதால், அவற்றின் அலுவலகங்களும் வலதுசாரிகளினால் தாக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையகத்தில் பணியாற்றிய உறுப்பினர்களின் வீடுகளும் தாக்கப்பட்டன.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications