பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. காஷ்மீர், டெல்லி, வட இந்தியா குலுங்கியது.. பப்புவா நியூ கினியாவிலும்!

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கட்டடங்கள் மிக பயங்கரமாகக் குலுங்கின. அங்கு ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது. இந்தப் பகுதிகளிலும் கட்டடங்கள் அதிர்ந்தன. ஆனால், சேதம் ஏதும் ஏற்படவில்லை.
பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை..
முன்னதாக தெற்கு பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
புதன்கிழமை அதிகாலையில் கடலுக்கு அடியில் கிழக்கு பகுதியில் 15 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது இந்தத் தீவின் கட்டிடங்கள் குலுங்கின. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ந மக்கள் அச்சத்தால் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். சேத நிலவரம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலநடுக்கம் காரணமாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.
பப்புவா நியூ கினியாவில் எரிமலைகள் சீற்றத்தோடு அடிக்கடி நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ளது இந்தத் தீவு.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications