திருப்பூர்: 500 பவுன் நகையுடன் அடகுக்கடை அதிபர் மாயம்
திருப்பூர்: திருப்பூரில் அடகுக் கடை உரிமையாளர் 300 பவுன் நகைகளுடன் மாயமாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. நகை, பணத்துடன் தலைமறைவான
அடகுக்கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பாஸ் அன்சாரி என்ற அந்த அடகுக்கடை உரிமையாளர் கோல்டன் நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக நகை அடகுக்கடை நடத்தி வந்தார். நகை அடகு பிடிப்பதோடு ஏலச்சீட்டு, பலகாரச் சீட்டு, வாரச்சீட்டு போன்றவற்றை நடத்தி வந்தார்.
இவரிடம் நூற்றுக்கணக்கானோர் நகைகளை அடகு வைத்தும், ஏலச்சீட்டில் பணம் கட்டியும் வருகிறார்கள்.
கடந்த ஒரு வார காலமாக அடகுக்கடை மூடப்பட்டு இருந்தது. நகைகளை திருப்பச் சென்றவர்கள் சந்தேகமடைந்து அப்பாஸ் அன்சாரியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்குச் சென்று புகார் மனு அளித்தனர். அடகுக் கடைக்காரரை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமறைவான அடகுக்கடை உரிமையாளர் அப்பாசிடம் ஏறக்குறைய 500 பவுன் தங்க நகைகள், பல லட்சம் ரூபாய் ஏலச்சீட்டுப் பணம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications