போலி ஏ.டி.எம் கார்டு கொடுத்து மக்களை ஏமாற்றிய பீகார் என்ஜினீயரிங் மாணவர் கைது
சேலம்: சேலம் ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக பீகாரைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடும் பணியை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சேலத்தில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் தவிக்கும் நபர்களுக்கு உதவுவது போல் நடித்து அவர்களிடம் போலி கார்டை கொடுத்து விட்டு ஒரிஜினல் கார்டு மூலம் பணம் எடுக்கும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் முள்ளுவாடி அருகே ஏ.டி.எம்.மையம் அருகில் வந்த 4 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். ஆனால், அவர்களில் 3 பேர் போலீசாரிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் ஒருவரை மடக்கி பிடித்து விசாரிக்கையில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரமோத்குமார் (வயது 26) என்பதும், ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுத்து தருவது போல் பொதுமக்கள் பலரை ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது.
கைதான பிரமோத்குமார் உள்பட 4 பேரும் சேலம் நரசோதிப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டை போலீசார் நோட்டமிட்டனர். அப்போது அங்கு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக்குமார் என்ற பீபுள் (வயது 23) என்ற மற்றொரு ஏடிஎம் திருடனும் பிடிபட்டான்.
விசாரணையில், கைதான அபிஷேக்குமார் சேலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஐ.டி. படித்தவர் என்பதும், ஏ.டி.எம். மையங்களில் கடந்த 4 ஆண்டுகளாக கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும், இதன்மூலம் பல லட்சக்கணக்கான ரூபாயை அக்கும்பல் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அபிஷேக்குமார், சேலத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 85 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார். ஆனால், கல்விக்கட்டணம் ரூ.2 லட்சத்திற்கு மேல் நிலுவை வைத்திருந்ததால், கல்லூரி நிர்வாகம் சான்றிதழ் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications