திமுக உறுப்பினர்கள் அனைவரும் என் ஆதரவாளர்களே: மு.க. அழகிரி பேட்டி
Subscribe to Oneindia Tamil

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னைக்கு வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மரக்காணத்தில் நடந்த சம்பவமே சாட்சி.
திமுகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. மாவட்ட செயலாளர் போன்ற பதவிகளுக்கு தான் போட்யிட வேண்டும். நான் கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலாளர் என்பதால் போட்யிட வேண்டியதில்லை. திமுகவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் என் ஆதரவாளர்கள் தான் என்றார்.












Click it and Unblock the Notifications