கோடை விடுமுறை: தலையணை அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலாப் பயணிகள் களக்காடு தலையணையில் குவிந்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக மேற்குத் தொடர்ச்சி மலை தலையணையில் ஓடி வரும் பச்சையாற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயிலில் இருந்து தப்பிக்கவும், கோடை விடுமுறையை குடும்பத்தினருடன் கொண்டாடவும் சுற்றுலாப் பயணிகள் தலையணைக்கு படையெடுத்து வருகின்றனர்.

தலையணை தடுப்பணை அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுவதால் காலை முதல் மாலை வரை சுற்றுலாப் பயணிகள் அங்கு உற்சாகமாக குளித்து வருகின்றனர். அங்குள்ள பார்வை மடத்தில் இருந்தவாறு இயற்கை அழகுகளை கண்டு களிக்கின்றனர். இதையடுத்து வனத்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தீவிர சோதனைக்கு பின்னரே சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மது, பிளாஸ்டிக் பைகள், ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், தலையணையில் குளிப்பது குதூகலமாக உள்ளது. வெயிலிலும் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இதமான குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் ஊருக்கு செல்லவே மனம் இல்லை என தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications