சிரியா விவகாரம்: ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கெர்ரி
Subscribe to Oneindia Tamil

கடந்த ஏப்ரல் 29ல் ஒபாமாவுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடிய புடின், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் ரஷ்ய பயணத்தின் போது அவரை நேரில் கண்டு பேசுவதாக வாக்களித்திருந்தார். அதை நிறைவேற்றும் விதமாக இந்த சந்திப்பு நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் கெர்ரியின் ரஷ்ய பயணத்தின் போது, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ்வை மே 7-8 தேதிகளில் சந்திப்பதாக முன்கூட்டியே திட்டமிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது, சிரியா மற்றும் ஈரான் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications