பெல்காம் மராத்தியருக்கு துரோகம் செய்த பாஜக தோற்றதில் மகிழ்ச்சி: சிவசேனாவின் உத்தவ்தாக்கரே அதிரடி!

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனாவும் நீண்டகாலமாக இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அண்மைக் காலாமாக ஜனாதிபதி தேர்தல் விவகாரம், மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது உள்ளிட்டவற்றில் சிவசேனா- பாஜக இடையேயே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இந்த சூழலில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனாவின் தலைவர் உத்தவ்தாக்கரே, கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைச் சந்தித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் மராத்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் பெல்காம் மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க சிவசேனா தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால் கர்நாடகாவில் ஆண்ட பாரதிய ஜனதா கட்சி இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் அந்த பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவியது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. கர்நாடக பாஜக ஆட்சியர்கள் மராத்தியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். அதனால் தான் அக்கட்சியின் தோல்வி எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
ஆனால் பாரதிய ஜனதாவோ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர் மகாதேவ் பண்டாரி கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஒரு கட்சி இப்படி விமர்சிப்பது சரியல்ல..பெல்காம் எல்லை விவகாரம் என்பது முந்தைய காங்கிரஸ் அரசு செய்திருக்க வேண்டியது.. அதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்











Click it and Unblock the Notifications