அட்சயதிரிதியை ... உங்க மனைவிக்கு நகை வாங்கிக் கொடுத்தீங்களா?

இன்று அட்சயதிரிதியை. இந்த நாளில் வீட்டில் பொன் வாங்கினால் நல்லது என்ற ஐதீகம் மக்களிடையே சமீபகாலமாக அதிகரித்துக் காணப்படுகிறது. இதை பயன்படுத்தி நகைக் கடைகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து விற்பனையைப் பெருக்கிக் கொள்கின்றன.
இந்த ஆண்டு இன்று அட்சய திரிதியையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நகைக்கடைகள் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகை திட்டங்களை விளம்பரப்படுத்தி வந்தன.
இன்று காலை 6 மணிக்கே பெரும்பாலான நகைக்கடைகள் திறக்கப்பட்டன. சென்னையைப் பொறுத்தவரை, தியாகராயநகர், பாரிமுனை, மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
வெளியூர்களில் இருந்து நகைகள் வாங்குவதற்காக அதிகாலையிலேயே மக்கள் நகைக்கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக வந்தனர். இன்று மக்கள் மனதைக் குளிர்விக்கும் வகையில் நகை விலையும் சவரனுக்கு ரூ. 144 குறைந்து காணப்பட்டது.
நகைக்கடைகளில் திருவிழாக் கோலம் காணப்பட்டதால் அனைத்துப் பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் இன்று நகைக் கடைகள் விழாக் கோலம் பூண்டு காணப்பட்டன.












Click it and Unblock the Notifications