புதுவை மத்திய சிறை வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 10 செல்போன்கள் பறிமுதல்
புதுச்சேரி: புதுவை காலாப்பட்டு சிறை வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 செல்போன்களை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுவை மாநிலம் காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் உள்ள சில கைதிகள் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இது குறித்த புகார்கள் உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சிறைத்துறை போலீசார் அவ்வப்போது சிறையில் திடீர் சோதனை நடத்தி, கைதிகளிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சோதனைக்கு பின்பும் கைதிகளிடம் செல்போன்கள் தாராளமாக புழக்கத்தில் இருப்பதாக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு மீண்டும் புகார் சென்றது.
இதனையடுத்து மத்திய சிறையில் தீவிர சோதனை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன் பேரில் சிறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சிறை வளாகத்தில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த 10 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications