’யார்ச்சகம்பா’எனும் 'இமாலய வயாக்ரா': கேள்விக்குறியாகும் 8,000 நேபாள மாணவர்களின் படிப்பு
காட்மாண்டு: 'இமாலய வயாக்ரா' அறுவடைக்கு மாணவர்கள் பெருமளவில் செல்வதால் அவர்களின் படிப்பு கெட்டு, எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாய சூழல் நேபாளத்தில் நிலவுகிறது.
உலகளாவிய அளவில் ஆண்மை எழுச்சியை அதிகரிக்கவல்ல அருமருந்தாக ‘வயாக்ரா' மாத்திரை கருதப்படுகிறது.
இந்த மாத்திரைக்கு இணையான ஆண்மை சக்தியை தரக்கூடிய அறியவகை பூஞ்சை நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரத்தில் விளைகிறது. இவ்வகை பூஞ்சைகளுக்கு சீனா, மியான்மர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது.
கம்பளிப்பூச்சி வயாகரா...
ஆரம்பத்தில் கம்பளிப்பூச்சியின் உடலைப் பற்றி, சில நாட்களில் கம்பளிப்பூச்சியை அழித்துவிட்டு ‘யார்ச்சகும்பா' எனப்படும் இந்த பூஞ்சை வளரத் தொடங்குகிறது.
வயாக்ரா டீ...
நீரில் இந்த பூஞ்சையை போட்டு கொதிக்க வைத்து தேனீர், சூப் போன்றவை தயாரித்து பருகினால் ஆண்மை வீரியமும், ஒருசில வகை புற்று நோயில் இருந்து நிவாரணமும் கிடைக்கிறது என ஆசியாவில் வாழும் அனேக மக்கள் நம்புகின்றனர்.
சூப்பர் விலை...
இவ்வகை பூஞ்சை கிலோ ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை விலை போகின்றன.
வசந்த கால நதிகளிலே...
இவற்றின் மகசூல் வசந்த காலத்தில்தான் அதிகம் என்பதால், இந்த இமயமலை வயாக்ராவை அறுவடை செய்ய உரிய பருவத்தில் நேபாள மக்கள் இமயமலை அடிவாரத்தை முற்றுகையிட தொடங்கி விடுகிறார்கள்.
பணம் சம்பாரிக்கும் ஆசை...
பள்ளிகளில் படிக்கும் தங்கள் வீட்டு பிள்ளைகளையும் இவர்கள் வயாக்ரா வேட்டைக்கு அழைத்து சென்று விடுவதால், இமயமலை அடிவாரத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சுமார் 8 ஆயிரம் நேபாள மாணவர்கள் பணம் சம்பாதிக்கும் குறியில் வகுப்புகளை புறக்கணித்து விடுகின்றனர்.
வெள்ளி, தங்கம் மாதிரி...
வெள்ளியின் விலைக்கும், தங்கத்தின் விலைக்கும் இடைப்பட்ட விலையில் இந்த யார்ச்சகம்பா பூஞ்சை விலை போவதால், ஓர் பருவ காலத்தின்போது மாணவர்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.
இளமையில் பயிர் செய்...
‘முதுமையில் இருக்கும் நபர்களுக்கு ஊக்க மருந்தை அறுவடை செய்யும் தேடலில், இளமை பருவத்தே பயிர் செய்ய வேண்டிய கல்வியை மாணவர்கள் கெடுத்துக் கொள்வது வேதனையான விஷயம்' என்கிறார், நேபாளத்தின் ஜார்கோட் மாவட்ட கல்வி அதிகாரியான பிரகாஷ் சுபேதி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications