103 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி 106 வயதில் மரணம்
ஆழப்புழா: கேரளாவில் 106 வயதுப் பாட்டி மரணமடைந்தார். இவர் தனது 103வது வயதில் 4ம் வகுப்புத் தேர்வை எழுதியவர் என்பது நினைவிருக்கலாம்.
ஆழப்புழா அருகேயுள்ள குறியநாடு பகுதியை சேர்ந்தவர் தொம்மன். இவரது மனைவி ஏலிக்குட்டி. இவருக்கு குரியன், தாமஸ், மேத்யூ, ஜோசப், வர்க்கீஸ் ஆகிய 5 மகன்களும், மேரி என்ற மகளும் உள்ளனர்.
இதில் அரசு ஊழியரான ஒரு மகனும், மகளும் உள்ளுரிலும், மற்றவர்கள் வெளி நாடுகளிலும் வசித்து வருகின்றனர். கேரளாவில் பள்ளிக்கு செல்லாத வயதானவர்களுக்காக அரசு சார்பில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சேர்ந்து படிக்க ஏலி்குட்டிக்கு ஆர்வம் ஏற்பட்டது.
இதுகுறித்து தனது மகனிடம் கூறினார். தாயின் ஆவலை பூர்த்தி செய்ய மகனும் முடிவு செய்தார். இதையடுத்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் வாரந்தோறும் நடந்த பயிற்சி வகுப்பில் ஏலிக்குட்டியை சேர்ந்தார்.
தள்ளாத வயதிலும் மகனுடன் பள்ளிக்கு சென்றார். இதை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து அரசு சார்பில் நடந்த சிறப்பு தேர்வில் கலந்து கொண்டு ஏலிக்குட்டி 4ம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இதனால் மூலம் கேரளாவில் அதிக வயதில் பள்ளி தேர்வு எழுதி சாதனை படைத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில்இருந்த ஏலிக்குட்டி தனது 106 வயதில் இறந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications