வீட்டுச் சாப்பாடு... தலையணை... ஓகே! ஆனா 'இ-சிகரெட்' கூடாது: சஞ்சய் தத்க்கு கோர்ட் உத்தரவு
மும்பை:எரவாடா சிறையில் அடைக்கப்படும் சஞ்சய் தத்துக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, மெல்லிய படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு மும்பை கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறைதண்டனை விதித்து மும்பை தடா கோர்ட் தீர்ப்பளித்தது. பின் இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சஞ்சய் தத்தின் தண்டனையை 5 ஆண்டாக குறைத்தது. எனவே, அவர் மும்பை தடா கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

படங்கள் இருந்த்ததால்...
அவர் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு இருந்ததால், கோர்ட்டில் சரண் அடைய நேற்று வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

சரண்...
அவகாசத்தை நீடிக்க கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்டடு தள்ளுபடி செய்ததையடுத்து நடிகர் சஞ்சய்தத் நேற்று பிற்பகல் மும்பை தடா கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். நடைமுறைகளுக்குப் பிறகு புனேயில் உள்ள எரவாடா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வீட்டுச்சாப்பாடு... தலையணை...
எரவாடா சிறையில் அடைக்கப்படும் அவருக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, மெல்லிய படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு மும்பை கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

சலுகை தொடருமா..?
அவருக்கு இந்த சலுகை தொடருமா என்பதை சிறை அதிகாரிகளே முடிவு செய்வார்களாம்.

மின்னணு சிகரெட்...
இதேபோல் சிறையில் மின்னணு சிகரெட்டுகளை புகைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சஞ்சய் தத் மனு செய்திருந்தார். அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.

சிறைக்குள் சுதந்திரம்....
சிறையில் சுதந்திரமாக நடமாடவும், தன் குடும்பத்தினர் தன்னை சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக கோர்ட் இன்னும் முடிவு செய்யவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications