பின் வாசல் வழியே வெளியேறிய சீமான்: போலீசாரோடு, தொண்டர்களும் சேர்ந்து மண்டபத்தில் தேடுதல்
கடலூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான். தலைமையில்,கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டம் நடத்தி பேசினார் சீமான்.
இரவு பத்து மணிக்குள்ளாக பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர். 9 மணி துவங்கி, 9.30 வரை இரு முறை கூட்டத்தை முடிக்கச் சொல்லி போலீஸ் தரப்பில் அவசரப்படுத்தினர். ஆனால் 9.40 வரை நிர்வாகிகளே பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் பேச வந்தார் சீமான். ஏரக்குறைய அப்போது 10 மணியாகி விட்டது. எனவே போலீஸார் 10 மணிக்கும் 10.10க்கும் 10.15க்கும் என மூன்று முறை மண்டபத்துக்குள் நுழைய முயற்சி செய்தனர்.
ஆனால், போலீசாரை உள்ளே விட மறுத்தனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் . இதனால் அதிரடியாக 10.20 மணி அளவில் மண்டபத்துக்குள் நுழைந்த போலீசார் மேடைப் பக்கம் சென்றனர்.
அதுவரை மேடையில் பேசிக்கொண்டிருந்த சீமான், போலீஸைக் க ண்ட நொடிப் பொழுதில், பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு விறுவிறுவென பக்கவாட்டுக் கதவு வழியே வெளியேறி, வேகமாக காரில் ஏறிப் பறந்துவிட்டார்.
போலீஸாரோடு சேர்ந்து தொண்டர்களும், சீமானை மண்டபத்திற்குள் தேடினர். இதுவரை சீமான் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிகிறது
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications