நகைக்கடையில் பண மோசடி: போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது
சென்னை: சென்னை நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து பணம் கேட்ட மோசடி நபர்களை போலீசார் கைது செய்தனர்.
வருமானவரித் துறை அலுவலகத்தில் நடக்கும் விழா ஒன்றுக்கு பணம் வேண்டும் என்று மாம்பலத்தில் உள்ள ஒரு நகைக் கடைக்கு, கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் பேசியுள்ளனர். ஏற்கனவே இதே நகைக் கடைக்கு போன் செய்து பணம் கேட்டு, அதன்படி, நகைக் கடைக்காரரும் ரூ.60,000 கொடுத்துள்ளார். இது பற்றி பின்னர் வருமான வரித்துறையில் விசாரித்த போது அப்படி ஒருவர் இல்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து அதேநபர்கள் மீண்டும் தொலைபேசியில் பேசவே, அவர்களை சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, நகைக் கடைக்காரர் போலீசில் புகார் அளித்தார்.
ஆனால் சுதாரித்த குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர். எனினும், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு சேஷாத்திரி (53), ஜார்ஜ் பாசித் (43) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பணமோசடிக்கு தலைமையாக செயல்பட்டவன் தலைமறைவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க மூளையாக செயல்பட்டவனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இதேபோல் வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து 45 லட்சம் மோசடி செய்த 5பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 33 லட்சத்தை போலீசார் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications