தடையை மீறி கருத்தரங்கம் நடத்தியதாக சீமான் மீது வழக்கு... கைது செய்ய போலீஸ் தீவிரம்!

கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பொதுக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை மீறி தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படம் போட்டு டிஜிட்டல் பேனர்களை நாம் தமிழர் கட்சியினர் வைத்ததால் பொதுக் கூட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.
இதையடுத்து கருத்தரங்கம் மட்டும் கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் நடந்தது. ஆனால் இந்த கருத்தரங்கத்தை தொடர்ந்து இரவு பொதுக் கூட்டமும் இதே மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து இரவு 10.20 மணி வரை நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
இந்நிலையில் நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், தடையை மீறி சீமான், நாம் தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கடல்தீபன், ஒலி, ஒளி அமைப்பு உரிமையாளர் ஆகியோர் கடலூர் டி.வி.எம். மகாலில் நாம் தமிழர் கட்சியினரை ஒன்று கூட்டி கலைநிகழ்ச்சி, நாடகம், கருத்தரங்கம் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி மூலம் அதிக சத்தம் ஏற்படுத்தியும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வாகனத்தை நிறுத்தியும், 30/2 போலீஸ் சட்டம் நிலுவையில் உள்ள போது இரவு 10 மணிக்கு மேல் 10.20 மணி வரை தொடர்ந்து பொது ஜன அமைதிக்கு குந்தகம், பங்கம் விளைவித்தார்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பேரில் சீமான், கடல்தீபன், சவுண்ட் சர்வீஸ் ஒலி, ஒளி அமைப்பு உரிமையாளர் ஆகிய 3 பேர் மீது திருப்பாதிரி புலியூர் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சீமான் உள்பட 3 பேரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications