மான் வேட்டையாடிய ரிடையர்ட் டி.எஸ்.பி. உள்பட 4 பேர் கைது: வனத்துறை அதிரடி
சேலம்: மான்களை வேட்டையாடிய ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. வீரமணி உள்ளிட்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. வீரமணி (60). அவருடன் சேர்ந்து மகேந்திரன் (32), பிரபாகரன் (25), மோகன் (23) ஆகியோர் கள்ளக்குறிச்சி, மூங்கில்துறைப்பட்டு, வானாபுரம் பகுதிகளில் வனவிலங்குகளை கடந்த சில நாட்களாக வேட்டையாடி வந்துள்ளனர்.
இந்த தகவல் மாவட்ட வன அலுவலர் நாகநாதனுக்கு கிடைத்தது. இதையடுத்து மான் வேட்டையாடுவர்களை பிடிக்க உதவி வன ஆலுவலர் மனோகரன், செங்கம் வனச்சரக அலுவலர் ஜெயராஜ், ராமநாதன், வனக்காப்பாளர்கள் தாண்டவராயன், சிவக்குமார், அய்யோதி, சதாசிவம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் வனப் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்செங்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேகமாக வந்த டாடா இன்டிகா காரை மடக்கி பரிசோதனையிட்டனர். அப்போது 2 ஆண் மான்கள், 3 பெண் மான்கள் என மொத்தம் 5 மான்களை வேட்டையாடி கொன்று கார் டிக்கியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காரில் இருந்த வீரமணி, மகேந்திரன், பிரபாகரன், மோகன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி, பேட்டரி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications