மழை இல்லை... காட்டுத் தீ பரவும் அபாயம்: களக்காடு புலிகள் காப்பகம் இன்று முதல் மூடல்
களக்காடு: கடும் வறட்சி காரணமாக காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால், களக்காடு புலிகள் காப்பகம் இன்று முதல் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் கூறியதாவது, ‘களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. தலையணையில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து, தற்போது முற்றிலும் வறண்டு விட்டது. தடுப்பணை அருவியிலும் தண்ணீர் விழவில்லை.
தடுப்பணை அருகே பள்ளத்தில் சிறிதளவு தண்ணீர் தேங்கி நின்றாலும், அது குளியல் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை. மழை இல்லாததால் பசுமையுடன் காட்சி அளித்த வனப்பகுதி காய்ந்து காணப்படுகிறது. இதனால் எளிதில் காட்டுத் தீ பரவும் அபாயம் நிலவி வருகிறது.
இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பகத்தை இன்று (20ம் தேதி) முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. தலையணைக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து, வறட்சி நீங்கியதும், புலிகள் காப்பகம் திறக்கப்பட்டு, மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்' என கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications