இனி, செல்போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்ய முடியும்...: இந்திய-அமெரிக்க மாணவி சாதனை
வாஷிங்டன்: 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவியை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
ஆறாம் விரலாய் மாறிப்போன செல்போன்களில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அதி நவீன வசதிகள் அறிமுகமாகிய வண்ணமே உள்ளன. ஆனால், எந்திர வாழ்க்கையில் செல்போனிற்கு சார்ஜ் போடுவதற்குத் தான் நம்மில் பலருக்கு நேரம் இருப்பதில்லை. இதற்கு ஒரு விடிவு காலமாக 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செல்போன் சார்ஜர் கண்டுபிடிப்பு...
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சரகோட்டா நகரில் வாழ்ந்துவருபவர் ஈஷா கரே.இந்த இளம் பெண் 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யும் அதி நவீன சார்ஜர் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

விருதும், நிதி உதவியும்...
இக்கண்டுபிடிப்பிற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம் விஞ்ஞானி விருதினையும் ஈஷா பெற்றுள்ளார். இந்தக் கருவியை மேம்படுத்த அமெரிக்க அரசு இவருக்கு 50,000 டாலர் நிதி உதவியும் அளித்துள்ளது.

எனக்காக கண்டுபிடித்தேன்...
தன்னுடைய செல்போனின் பாட்டரி அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலை ஏற்பட்டதே தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கு தூண்டுகோலாக இருந்தது என்று கூறியுள்ளார் ஈஷா.

பல மடங்கு பயன்....
சாதரணாமாக 1000 முறை பயன்படுத்தக் கூடிய பாட்டரிகளைப் போல் இல்லாமல், தன்னுடைய கருவியை 10,000 முறை சார்ஜ் செய்யப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றார்.

அதிகப்பயன்பாடு மிக்கது...
இந்த பாட்டரி சிறு மின்விளக்குகளில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாகவும், செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்களில் இவற்றின் பயன்பாடு வெற்றிகரமானதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications