2006- மாலேகான் குண்டு வெடிப்பு- 4 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏ
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 37 பேரை பலி கொண்ட 2006ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவ வ்ழக்கில் 4 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. ராம்ஜி கல்சங்ரா என்பவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி பள்ளிவாசல் அருகே குண்டுவெடித்தது. பின்னர் சிறிது நேரத்தில் அருகில் உள்ள சந்தை பகுதியில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 37 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் படு காயமடைந்தனர். இது தொடர்பாக 9 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் இந்து தீவிரவாத குழுக்களுக்கு தொடர்பு உள்ளது என்று அசீமானந்தா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு மறு விசாரணை நடத்தி இந்து தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர். இன்று மகாராஷ்டிரா சிறப்பு நீதிபதி பிரித்விராஜ் சவான் முன்னிலையில் 5 வால்யூம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் சர்மா, தான் சிங், ராஜேந்திர சவுத்ரி மற்றும் மனோகர்சிங் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ராம்ஜி கல்சங்ரா தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்..
இதே மாலேகானில்2008 ஆம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்காக இந்து அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங், முன்னாள் லெப். கேணல். ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications