இந்தியாவிடம் 1000 மெகாவாட் மின்சாரம் கேட்கும் திட்டத்தில் பாகிஸ்தான்

கடும் கோடைக் காலம் நிலவிவரும் சூழலில், பாகிஸ்தானில் கடுமையான மின்சார தட்டுப்பாடும் கை கோர்த்துக் கொண்டு மக்களை வாட்டுகிறது. பல பகுதிகளில் மக்கள் 4 மணி நேரம் கூட மின்சாரம் கிடைக்கப்பெறாமல் அல்லல் பட்டு வருகின்றனர்.
இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி போன்ற முக்கிய பெருநகரங்களில் கூட தொடர்ச்சியான அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காக அரசு புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்த வண்ணமே உள்ளது. முதலில், அரசு அலுவலகங்களில் குளிர் சாதன இயந்திரங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பின் உடைக் கட்டுப்பாடு, வீடுகளில் தண்ணீர் மோட்டார் பயன் படுத்த தடை என பட்டியல் நீள்கிறது. நிறுவனங்களுக்கும், மின்சாரத்தை உபயோகிக்க கடும் நிபந்தனைகளும் கட்டுப்பாடும் கூட விதிக்கப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீப் தலைமையில் விரைவில் புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில், இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அண்டை நாடுகளான இந்தியா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் மின்சாரம் கொள்முதல் செய்வதுதான் மின் பற்றாக்குறைக்கான உடனடி தீர்வாக அமையும் என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'இந்தியாவில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்யப்படுவது உண்மைதான் ' என்று உலக வங்கியின் இஸ்லாமாபாத் அதிகாரி ஒருவரும் கூறியுள்ளார்.
விலை நிர்ணயம் மற்றும் மின்சாரம் கொண்டு வருவதற்கான வழித்தடங்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பின்னர் இந்தியாவில் இருந்து 2 ஆண்டு காலத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications