மாரடைப்பால் துடிப்பு... ரயிலை நிறுத்தி ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிர் காத்த டிரைவர்
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய மின்சார ரயில் கும்மிடிப்பூண்டிக்கு வந்தபோது திடீரென நின்றது. குழப்பமடைந்த பயணிகள் என்ன ஏது என்று பார்த்தபோது ரயிலை நிறுத்தி விட்டு என்ஜின் டிரைவர் மாரடைப்பால் துடித்த விவரம் தெரிய வந்து அனைவரும் அதிர்ந்து போயினர்.
தனக்கு ஏற்பட்ட மாரடைப்பால் ரயிலை உடனடியாக நிறுத்தி விட்டு அத்தனை பயணிகளின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளார் என்ஜின் டிரைவரான மனோகரன்.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 9 மணிக்கு வந்து சேரவேண்டிய கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் வழியிலேயே நின்றுவிட்டது. இதனால், என்ன நடந்தது குழப்பத்தில் ரயில் பயணிகள் ரயிலிலேயே காத்திருந்தனர்.
அரை மணி நேரம் காத்திருந்தும் ரயில் புறப்படவில்லை. இதனால், பயணிகள் இறங்கி வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடமான கவரப்பேட்டை நிலைய அதிகாரியிடம் தகராறு செய்தனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போதுதான் நடந்த விவரம் தெரிய வந்தது.
திருவள்ளூர் மாவட்டம் நக்கீரன் தெருவைச்சேர்ந்தவர் சம்பந்தம் பிள்ளை. இவரது மகன் மனோகரன். தென்னக ரயில்வேயில் ரயில் ஓட்டுநராக பனியாற்றி வந்தார். இவர்தான் நேற்று கும்மிடிப்பூண்டியில் இருந்து செண்ட்ரல் நோக்கி வந்து ரயிலை இயக்கியவர். கும்மிடிப்பூண்டியிலிருந்து ரயில் புறப்பட்டதும் மனோகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் ரயிலை இயக்கும்போது நிலை தடுமாறியிருக்கிறார்.
உடனடியாக பிரேக் அடித்தாலோ அல்லது வலியின் காரண்மாக தடுமாறி கீழே சாய்ந்தாலோ ரயிலில் இருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் போயிருக்கும். இதனால் அவர் தனது வலியை தாங்கிக்கொண்டு கவரப்பேட்டையில் ரயிலை நிறுத்திவிட்டார்.
வலியால் துடித்த மனோகரனை ரயில்வே அதிகாரிகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலன் இல்லாமல் மனோகரன் உயிரிழந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications