திருச்சி... பலாத்காரத்துக்குள்ளான சிறுமிக்கு சிகிச்சை மறுப்பு- மாதர் சங்கம் மறியல்!
திருச்சி: பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்காததை கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு மருத்துவமனையையும் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி பாலக்கரையை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 25ந் தேதி உலகநாதன் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூடினர். அதற்குள் உலகநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான காமுகனை தேடிவந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த உலகநாதனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 26ந் தேதி அனுமதிக்கப்பட்டாள். ஆனால், 2 நாட்களாக மருத்துவ பரிசோதனை எதுவும் நடத்தாமல் சிறுமியை தரையில் படுக்க வைத்திருந்தனர். இதையறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநகர செயலாளர் ஆயிஷா, மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் பெண்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன் கூடினர். பின்னர் அவர்கள் மருத்துவமனை எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டு மருத்துவமனைக்குள் முற்றுகையிட நுழைந்தனர். மருத்துவமனை உள்ளே சென்ற அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உலகநாதன் மீது 2013ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் வலியுறுத்தினர்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications