மூக்கில் ஆக்ஸிஜன் ட்யூப் + கையில் பேனா = 52.6% மதிப்பெண்கள்
டெல்லி: ஆக்ஸிஜன் கருவி இல்லாமல் 90 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாத பள்ளி மாணவி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 52.6% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகளான நேகா மெண்டிராட்டா சென்ற வருடம் மார்ச் முதல் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆக்ஸிஜன் கருவியின் உதவியுடன் தான அவர் சுவாசித்து வந்தார்.
டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இலவச சிகிச்சையும் மருந்துகளும் பெற்று வந்தார் நேகா. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படத் தக்க வகையில் ஆக்ஸிஜன் கருவி ஒன்றின் உதவியோடே அவர் சுவாசித்து வந்தார்.
தொடர்ந்து 90 நிமிடங்களுக்குமேல் ஆக்சிஜன் கருவி உதவி இல்லாமல் இருந்தால், கடினமான இருமல்களால் அவதிப்பட வேண்டி வரும் நிலையில் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார் நேஹா. மூச்சுக்குழாய்கள் நிரந்தரமாக பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.
இந்நிலையில் மனம் தளராத நேஹா, கடந்த மார்ச்சில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுதினார். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளில் 52.6 சதவிகிதம் மதிப்பெண் பெற்று, அவர் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.
ஓவியத்திலும்,கை வேலைப்பாடுகளிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ள நேஹா ஆக்ஸிஜன் துணையோடு நல்ல மதிப்பெண்கள் பெற்று பன்னிரண்டாம்வகுப்பில் தேர்வானது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயமே.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications