’வாவ் சூப்பர்’ பேஸ்புக்கில் லைக் போடும் புதிய வைரஸ்கள்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
வாஷிங்டன்: பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் புதிய வகை வைரஸ் ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.
பேஸ்புக்கை பயன் படுத்துவோரில் பெரும்பாலானோர் தங்களுக்கு தெரிந்தவர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் செய்திகளுக்கு லைக் போடும் பழக்கமுடையவர்கள் தான். தற்போது காலத்திற்கேற்ப இந்த வரிசையில் வைரஸ் ஒன்றையும் களத்தில் இறக்கியுள்ளனர் சதிகாரர்கள்.
தற்போதைக்கு பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே இந்த வைரஸ் லைக் போட்டு கமெண்ட் எழுதுகிறதாம். விரைவில் இது மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறதாம்.

புதிய ட்ரோஜன் ஹார்ஸ்...
ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஆன இதற்கு ‘Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறதாம்.

லைக் போடும் வைரஸ்...
வைரஸ் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா என முதலில் பார்த்து விட்டு, அப்படி லாக் இன் செய்திடும் பட்சத்தில் உடனடியாக தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை டவுண்லோடு செய்கிறது இந்த ட்ரோஜன்.

அடிமை...
இந்த ட்ரோஜன் மூலம் மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு கட்டளைக் கையால முடியுமாம்.

தொடர்பிலேயே இருக்குமாம்....
இந்த ட்ரோஜனின் மற்றுமொரு சிறப்பம்சம் தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு தன்னை அப்டேட் செய்து கொள்ளும் வசதிதான்.

விரைவில் பரவும் அபாயம்...
அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இது போன்ற செயல்களுக்குப் பலியான ஒரு பேஸ்புக் பக்கத்தினைத் தொடர்ந்து தன் கண்காணித்து இந்த வைரஸைப் பிரித்தெடுத்துள்ளது. விரைவில் இந்த வைரஸ் ஆங்கிலத்தில் உருமாறி, கூகுள் ட்ரான்ஸலேட்டர் சப்போர்டுடன் மற்ற எல்லா மொழிகளிலும் நுழைய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மறக்காம லாக் அவுட் பண்ணுங்க...
தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத ஆட் ஆன் புரோகிராம்களை, டவுண்லோட் செய்வதை தவிர்ப்பதே இதிலிருந்து தப்பிக்க தற்காலிக வழி என மைக்ரோசாப்ட் மற்றும் பிரபல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. பயன்படுத்திய பின்னர் மறக்காமல் பேஸ்புக்கை லாக் அவுட் செய்திடுமாறு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications