இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி: 10 ஆண்டுகளில் 17.7% அதிகரிப்பு
டெல்லி: நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக (1,21,05,69,573) அதிகரித்துள்ளது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 62.3 கோடி (62,31,21,843). பெண்களின் எண்ணிக்கை 58.7 கோடியாகுமம் (58,74,47,730). இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத அதிகரிப்பாகும்.
தேசிய அளவில் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்ஸஸ் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம்:
2001 முதல் 2011ம் வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இதில் ஆண், பெண்களின் எண்ணிக்கை சரிசமமாக தலா 9 கோடி அதிகரித்துள்ளது.

நாட்டில் பெரும்பான்மையானோர் இன்னும் கிராமப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 68.8 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளிலும் 31.2 சதவீதம் பேர் நகர் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
நாட்டில் 1000 ஆண்களுக்கு 943 பெண்களே உள்ளனர். இது கிராமப் பகுதிகளில் 949 ஆகவும் நகர்ப் பகுதிகளில் 929 ஆகவும் உள்ளது. ஆக, நகர்ப் பகுதிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரை 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகளே உள்ளனர். இது கிராமப் பகுதிகளில் 923 ஆகவும் நகர்ப் பகுதிகளில் 905 ஆகவும் உள்ளது. ஆக, நகர்ப் பகுதிகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

தேசிய அளவில் கல்வியறிவு பெற்றோரின் அளவு 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 80.9 சதவீதமும், பெண்கள் 64.6 சதவீதமும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications