ரயில் பெட்டி தயாரிக்கும் திட்டத்தை தனியாருக்கு கொடுக்கக் கூடாது: தா.பாண்டியன் எதிர்ப்பு
சென்னை: ரயில் பெட்டி தயாரிக்கும் திட்டத்தை தனியாருக்கு கொடுப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 1952ம் வருடம் தொடங்கப்பட்ட பெரம்பூர் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) 11,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கு ரூ. 240 கோடியில் 2-வது யூனிட் தொடங்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்காமல் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் 400 ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான ஆர்டர், மேற்கு வங்கத்தில் உள்ள 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஐ.சி.எப். தொழிலாளர்கள் உழைத்து உருவாக்கிய சுமார் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள வரைபடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மட்டுமின்றி சக்கரங்கள், இரும்பு, மின் சாதனங்கள் ஆகியவையும் தரப்படுகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் ஒவ்வொரு பெட்டிக்கும் பெரம்பூரில் உற்பத்தியாகும் அடக்க விலையை விட ரூ. 50 லட்சம் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 பெட்டிகளுக்கும் ரூ. 120 கோடி அதிகமாக தர வேண்டியிருக்கும்.
அரசின் இந்த முடிவால் பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையை மூடும் நிலை ஏற்படும். எனவே, தனியாரிடம் 400 பெட்டிகள் தயாரிப்பை ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். பெரம்பூர் ஐ.சி.எப்பில் திட்டமிட்டபடி 2-வது யூனிட்டை உடனே தொடங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications