அப்படியே வாஜ்பாயி மாதிரியே இருக்கிறார் ம.பி. முதல்வர் செளகான்- அத்வானி பேச்சு

மோடிக்கு பாதகமாக முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. செளகான் குறித்து அத்வானி கூறுகையில், வாஜ்பாய் எப்போதும் எளிமையானவர், இரக்கக் குணம் மிக்கவர். பிடிவாதம் இல்லாதவர், முரட்டுத்தனம் இல்லாதவர். அதேபோல செளகானும் எளிமையாக இருக்கிறார், அடக்கமாக இருக்கிறார். வாஜ்பாயியைப் போல இருக்கிறார்.
நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக வந்தபோது ஏற்கனவே அது நன்கு வளர்ந்த மாநிலமாக இருந்தது. அதை மேலும் சிறப்பாக்கினார் மோடி. இதை நான் மோடியிடமே சொல்லும்போது ஏற்கனவே நன்கு வளர்ந்திருந்த குஜராத்தை நீங்கள் பன்மடங்கு உயர்த்தியுள்ளீர்கள் என்று கூறுவேன்.
ஆனால் மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் போன்றவை அப்படி இல்லை. அவை வளர்ச்சி அடையாத மாநிலங்களாக இருந்தன. ஆனால் சிவராஜ் செளகான் வந்தபிறகு மத்தியப் பிரதேசம் பல மடங்கு வளர்ச்சியைச் சந்தித்தது. இருப்பினும் இன்னும் அவர் எளிமையான மனிதராக இருக்கிறார். அது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
மோடியை கீழே இறக்கி, செளகானை மேலே உயர்த்தி பேசியுள்ள அத்வானியின் இந்தப் பேச்சு மோடி ஆதரவாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
எப்போதுமே மோடியை விரும்பாதவர் அத்வானி. எனவே அவர் செளகானை மோடிக்கு எதிராக கொம்புசீவி விடுகிறாரோ என்ற சந்தேகமு் எழுந்துள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications